எம்எல்ஏ., உண்ணாவிரத போராட்டம்

தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு தேவையான வசதிகள் செய்து தராததால், கலெக்டர் அலுவலகம் முன்பு எம்எல்ஏ., வெங்கடேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.;

Update: 2024-03-08 15:41 GMT

தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பம்பட்டி ஊராட்சியில் சோழியலூர் முதல் மலையூர் காடு வரை உள்ள 10 கிராமங்கள் உள்ளடக்கிய 7.6 கிலோமீட்டர் தார் சாலை நீண்ட காலமாக மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த சாலையை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் அதியமான் கோட்டை ஊராட்சி அதிய மான் கோட்டை பிரதான சாலை முதல் கொடியூர் செல்லும் ஏரிக்கரை வரை உள்ள தார் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அனைத்து சாலைகளும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் தினந்தோறும் இச்சாலையில் பயணிக்கும் விவசாய பெருமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாண விகள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Advertisement

இந்த பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரக் கோரி பல்வேறு முறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்த நிலையில் தற்போது வரை அதனை சரி செய்ய தராததை அடுத்து இன்று காலை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளரும் தர்மபுரி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக பாமக கட்சியை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில் எம்.எல்.ஏ.வின் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News