நமக்கு நாமே திட்டம் மூலம் புதிய வகுப்பறை கட்டிடங்களை எம்எல்ஏ திறப்பு
மதுரவாயல் பகுதியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார்.;
Update: 2024-02-09 11:42 GMT
புதிய வகுப்பறை கட்டிடங்களை எம்எல்ஏ திறப்பு
புதிய வகுப்பறை கட்டிடங்களை எம்எல்ஏ திறப்பு
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-145, நெற்குன்றம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நமக்கு நாமே திட்டம் மூலம் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கூடுதல் 2 வகுப்பறைகள் திறப்பு நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், M.C.பகுதி கழக நிர்வாகிகள் தீ.பாலாஜி, M.உதயகுமார், வட்ட கழக செயலாளர்கள் ப.ஆலன், M.K.P.அண்ணாதாசன், M.E.ஸ்டாலின்,M.C., M.M.ஜெயரத்தினம், M.ரூபன், மாவட்ட பிரதிநிதிகள் R.கர்ணல், P.சங்கர், R.ரசூல்தீன் மற்றும் கழக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.