ரெட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் எம்எல்ஏ ஆய்வு

Update: 2023-11-16 03:02 GMT
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .பாலாஜி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அச்சரப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணியை தொடங்கியது. நிதி பற்றாக்குறையால் மண்டபம் பணியில் தொய்வு ஏற்பட்டது.. அந்த பணி முழு அளவில் நிறைவு பெறாமல் காலதாமதம் ஆன நிலையில் அந்த நினைவு மண்டபத்தை உடனடியாக முழுமைப்படுத்த வேண்டும் என தற்போதைய திமுக அரசிடம் விசிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.அந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியது. இதையடுத்து பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விசிக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் S. பாலாஜி இப்பணியை பார்வையிட்டு கூறுகையில் இப்பணி ஜனவரி மாதத்திற்குள் முடியும் தருவாயில் உள்ளது. அதன் பிறகு செய்தி விளம்பரத்துறயிடம் ஒப்படைக்கப்பட்டு இதை திறக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் கூறினார்.

Tags:    

Similar News