திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்படும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Update: 2024-02-18 09:58 GMT
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.