இராஜாஜி நீச்சல் குளத்தை எம்எல்ஏ ஆய்வு

இலக்கியம்பட்டி ராஜாஜி நீச்சல் குளத்தினை தர்மபுரி மண்டையில் திடீரென கள ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-11 10:54 GMT

கள ஆய்வு

தர்மபுரி மாவட்டம், மற்றும் வட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி, தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி இராஜாஜி நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற வரும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நீச்சல் குளம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டதை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.

மேலும் தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஏராளமான பொதுமக்களும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விடுமுறை நாட்களில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வர இருப்பதனால் அதற்கு தகுந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றதா என்பதை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.இந்த நிகழ்வில் உடன் பாமக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி அவர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News