வளர்ச்சி பணிகளை – எம்எல்ஏ ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

Update: 2024-02-03 07:49 GMT

வளர்ச்சி பணிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம் ஆசூர் கிராமத்தில் 15-வது மானிய நிதி யில் இருந்து ரூ. 39 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் துணை சுகா தார நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை புகழேந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய் தார். தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஆசூர் காலனியில் ரூ.9 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் ரேஷன் கடை கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணியை விரைந்து முடித்து பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னம்பலம், ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர்கள் இளங்கோ, செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன், கண்காணிப்பு குழு எத்திராசன், சங்கர், கலைச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    

Tags:    

Similar News