புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை. எம்எல்ஏ பங்கேற்பு.

சின்னதாராபுரம்-புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையில் எம்எல்ஏ பங்கேற்பு.

Update: 2023-12-08 02:39 GMT

புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை. எம்எல்ஏ பங்கேற்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை. எம்எல்ஏ பங்கேற்பு. கரூர் மாவட்டம், க.பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான மொஞ்சனூர் P.R.இளங்கோ தலைமையில், சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில், புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை, பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பூமி பூஜை விழாவில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ இளங்கோ. இந்த நிகழ்ச்சியில், க.பரமத்தி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி , உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News