கடலூர்: எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய போது விபத்தில் படுகாயமடைந்தவர்களை எம்எல்ஏ நேரில் ஆறுதல் தெரிவித்தார்.;
Update: 2024-01-31 05:12 GMT
நேரில் ஆறுதல் கூறிய எம்எல்ஏ
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி ஆணைப்படி புதுச்சத்திரம் வில்லியநல்லூரை சேர்ந்த மொத்தம் 19 பேர் விபத்தில் படுகாயம் ஏற்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் ஆணைப்படி கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், கடலூர் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விசிக தலைவர் வழங்கிய நிதியினை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தனர்.