செங்கோட்டை அரசு மருத்துவர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு

செங்கோட்டை அரசு மருத்துவர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2024-05-11 04:53 GMT

செங்கோட்டை அரசு மருத்துவர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்.


தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அரசு பொதுமருத்துவமனை சிறப்பான மருத்துவ சேவையாற்றி வருகிறது. மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஸ்கண்ணன் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றனர். பிரசவ அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை, எலும்பு, மூட்டு மருத்துவ அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்கைளும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுத்தம், சகாதாரம், சுற்றப்புற துாய்மை நோய் பரவாத்தன்மை வெளிப்படை யான நிர்வாகம் ஆகியவற்றிற் கான மத்திய அரசின் உயரிய விருதான காயகல்ப விருது பெற்றுள்ளது.

Advertisement

இதற்காக ரூபாய் 10 லட்சம் பரிசும் கிடைத்துள் ளது. விருது பெற்ற தகவல் அறிந்த கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக செயலாளருமான கிருஷ்ண முரளி(எ)குட்டியப்பா அரசு மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்று விருது பெற்ற மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஸ்கண்ணன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மேலும் மருத்துவமனைக்கு அத்தியவசிய தேவைகள் குறித்து விபரங்கள் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News