குடிநீர் வாரிய பணிகளை எம்எல்ஏ துவக்கி வைப்பு
சென்னை மதுரவாயலில் குடிநீர் வாரிய பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.;
Update: 2024-03-06 12:24 GMT
பூமிபூஜை
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-147, ஆலப்பாக்கம் பணிமனை பல்வேறு தெருக்களில் பழுதடைந்த குடிநீர் குழாய்களை புதிய குடிநீர் குழாய்களாக மாற்றி அமைக்கும் திட்டத்திற்கு சென்னை குடிநீர் வாரிய நிதி மூலம் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் இன்று 06.03.2024 காலை 10.30 மணியளவில் அடிக்கல் பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன்., மாமன்ற உறுப்பினர் ரமணி மாதவன்.,திமுக வட்ட கழக செயலாளர் மாதவன், மாவட்ட பிரதிநிதிகள் க.பிருந்தாவனம், குப்புசாமி மற்றும் கழக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.