அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

செய்யூர் அரசு பொது மருத்துவமனை மேம்பாடு குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-11-02 13:22 GMT

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

. தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்க்க முடியாத பிரச்சனைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை மேம்டுத்த வேண்டும் என செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

இதனை தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் சுகாதாரத்துறை செய்யூர் மருத்துவமனைக்கு உடல் பிரேதங்களை பதப்படுத்த குளிர்சாதன வசதியுடன் பிணவரை கட்ட 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பிணை வரை கட்டவும் மருத்துவமனையை மேம்படுத்தவும் செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு. பாபு ஆய்வு செய்தார்.

மேலும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் போது இலத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு, துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாச்சலம், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு, இடைக்கழிநாடு பேரூர் செயலாளர் மோகன்தாஸ், கவுன்சிலர் மோகனா கோபிநாத், ஊராட்சி மன்ற தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News