பாமக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ அருள் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி பகுதிகளான கொண்டப்பநாயக்கன்பட்டியில் தொடங்கி செட்டிச்சாவடி, வெள்ளக்கல்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் அருள் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேலம் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் ந. அண்ணாதுரைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மக்களிடம் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தொடர மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அருள் எம்.எல்.ஏ பேசும் போது தன்னை சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்தது போல் அண்ணாதுரையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் நான் உங்களுடன் சுமார் 1000 நாட்கள் பயணித்து உங்களின் தேவைகளை இல்லம் தேடி எம்எல்ஏவாக வந்தும், இ-சேவை முகாம்கள் மூலமாகவும், சட்டமன்றத்தில் கேள்விகள் மூலமாகவும் பணிகள் செய்வது போல் இவரும் தங்களின் தேவைகளை அறிந்து குறைகளை தீர்த்து உங்களுக்கு ஒரு சேவகனாக, உண்மை ஊழியனாக இருப்பார் எனவே பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அண்ணாதுரைக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.