வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ

கெலமங்கலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து எம்.எல்.ஏ முனுசாமி துவக்கி வைத்தார்.

Update: 2024-02-29 04:12 GMT

பூமி பூஜை 

 கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் சூளகுண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், பட்டிபாறை கிராமத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்ட ரூ.23 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு வேப்பனபள்ளி எம். எல். ஏ கே. பி. முனுசாமி கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News