கொடைக்கானல் நகரில் மிதமான மழை

கொடைக்கானல் நகர்ப்பகுதி மற்றும் மலைக்கிராமங்களில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மிதமான மழையால் குளுமையான சூழல்,சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2024-05-13 15:51 GMT
கொட்டி தீர்த்த மழை

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை முதல் மிதமான வெப்பம் நிலவிய நிலையில்,

நண்பகல் வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதை தொடர்ந்து சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக இடைவெளி விட்டு விட்டு மிதமான மழை பெய்தது, குறிப்பாக அப்சர்வேட்டரி, அண்ணாசாலை,ஏரி சாலை, உகார்தேநகர், பாம்பார்புரம், செண்பகனூர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளிலும்,

பழனி பிரிவு, பெருமாள்மலை, பேத்துப்பாறை உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையாகவும், ஒரு சில பகுதிகளில் சாரல் மழையாகவும் பெய்து வருகின்றது, இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது மழை தொடர்வதால் முக்கிய குடிநீர் தேங்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருவதுடன் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சுழலும் நிலவி வருகின்றது.

Tags:    

Similar News