மோடி தான் தமிழக வளர்ச்சிக்கு தடை - ராமகிருஷ்ணன்
திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தமிழக வளர்ச்சிக்கு தடையாக பிரதமர் மோடி உள்ளதாக தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை திடலில் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பங்கேற்று ஏழாம் முறையாக பிரதமர் தமிழகம் வந்துள்ளதாகவும் சென்னை தூத்துக்குடியில் நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிப்பு ஏற்பட்ட போது மக்களை சந்திக்க வராத மோடி தற்போது தமிழகத்தில் அரசியல் பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும் தமிழக வளர்ச்சிக்கு மோடி தடையாக உள்ளதாகவும் பேசினார்.மேலும் அவர் பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது எனவும் தமிழகம் புதுச்சேரி 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.