சாலையில் கிடந்த பணம் - உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்

மயிலாடுதுறை அருகே கீழே கிடந்த கைப்பையில் இருந்த 15 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்து  உரியவரிடம் ஒப்படைத்த பெரம்பூர் காவல் சிறப்பு உதவி  ஆய்வாளருக்கு பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2024-05-10 04:00 GMT

உரியவரிடம் பணம் ஒப்படைப்பு 

 மயிலாடுதுறை மாவட்டம் கடுவங் குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் எலந்தங்குடி பகுதியில் தனியார் மஹால் அருகில் சாலையில் சென்ற பொழுது தன்னிடம் இருந்த கை பையினை தவறவிட்டுள்ளார். அதில் சுமார் 15,000 பணம் ரொக்கம் இருந்துள்ளது. கைப்பை தவறியது தெரியாமல் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த வழியாக சென்ற தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள பெரம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் கண்ணன் என்பவர் கண்டெடுத்துள்ளார். பையை பார்க்கும் பொழுது அதில் 15000 ரொக்க பணம் இருந்துள்ளது. மேலும் சில ஆவணங்கள் இருந்துள்ளது.

ஆவணத்தில் உள்ள முகவரியை கண்டறிந்து  தகவல் தெரிவித்து மகேஷை பெரம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து காவல் நிலையத்தில் மகேஷ் தவறவிட்ட 15 ஆயிரம் ரொக்க பணத்துடன் கைபையை மற்றும் ஆவணங்களை வழங்கி உள்ளார் தவறவிட்ட பணம் ஆவணம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற வேதனையில் இருந்தவருக்கு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்து காணாமல் போன கைப்பை ரொக்கம் ஆவணம் திரும்ப வழங்கப்பட்டது அவருக்கு ஆனந்த மகிழ்ச்சி ஏற்பட்டது இந்த காலத்தில் எத்தனையோ காவலர்கள் பல்வேறு வழிகளில் லஞ்சம் பெறும் நிலையில் இப்படியும் ஒரு நேர்மையான காவல் அதிகாரி என ஆச்சரியத்துடன் சென்றுள்ளார் இதனை அறிந்த பலர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News