பறக்கும் படையினர் சோதனையில் 1,43,000 ரூபாய் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வாலிபரிடம் ரூ. ஒரு லட்சம் நாற்பதாயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.;
Update: 2024-03-23 13:17 GMT
பணம் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வாலிபரிடம் ரூ. ஒரு லட்சம் நாற்பதாயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பழனி சின்ன கவுண்டன்புதூர் ஐயம்பாளையத்தினை சேர்ந்த ஜனகராஜ் என்பவரின் மகன் ராம்குமார் என்பவர் நெய்க்காரப்பட்டியில் இருந்து சின்ன கவுண்டன் புதூர் செல்லும் சாலையில் 1,43,000கொண்டு சென்றார் . அப்போது பறக்கும் படையினர் சோதனை செய்தனர். மேற்கண்ட தொகைக்கு சரியான கணக்கு ஏதும் காட்டப்படவில்லை.இந்நிலையில் பணத்தை கைப்பற்றிய தேர்தல் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.