உணவு மற்றும் நீர் தேடி தேசிய நெடுஞ்சாலையில் அலைமோதும் குரங்குகள்
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது குரங்குகள் படையெடுக்க துவங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் வனப்பகுதியில் இருந்து குரங்குகள், மயில்கள், உட்பட பல்வேறு வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி தேசிய நெடுஞ்சாலை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலர் தொப்பூர் மலைப்பாதையில் அமைந்துள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு அவ்வப்போது உணவிட்டு வருகின்றனர்.
அதில் பிளாஸ்டிக் கழிவுகளும் இருப்பதனால் தர்மபுரி மாவட்ட வனத்துறை அலுவலகம் வனவிலங்குகளுக்கு அத்துமீறி உணவளிக்கக் கூடாது என தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மக்கள் நடமாட்டம் இருப்பதால் உணவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக எண்ணி வனவிலங்குகள் தொடர்ந்து தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது படையெடுக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கோடை காலத்தில் வனப் பகுதியில் அங்கங்கே தண்ணீர் தொட்டி அமைத்து வன விலங்குகளை பாதுகாப்பை வனத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.