பட்டா மாற்ற சிறப்பு முகாமில் 1000 க்கும் மேற்பட்டோர் மனு
பட்டா மாற்ற சிறப்பு முகாமில் 1000 க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனா்
By : King 24x7 Website
Update: 2023-12-15 03:26 GMT
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, சேலம் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நெய்க்காரப்பட்டி பொன்னாக்கவுண்டர் மண்டபத்தில் பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடந்தது. சேலம் ஆர்.டி.ஓ., அம்பாயிரநாதன் தலைமை வகித்தார். சேலம், வீரபாண்டி, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர், புதிதாக பட்டா கேட்டும், பட்டாவில் திருந்தம் செய்யவும் மனு கொடுத்தனர். தெற்கு தாசில்தார் செம்மலை, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ் முல்லை, ஆகியோர் பொது மக்களிடம் விண்ணப்பங்களை பெற்றனர்.