முருங்கை விலை கிடு கிடு உயர்வு

திருப்புவனம் மார்க்கெட்டில் முருங்கைக்காயின் விலை கடும் உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2024-01-05 04:46 GMT

முருங்கை 

தமிழகத்தில் தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கைக்காய் விளைவிக்கப்படுகிறது. கடும் பனி காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வட மாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் மதுரை மார்கெட்டிற்கு வந்து திருப்புவனத்திற்கு வருகிறது. இந்நிலையில் முருங்கைக்காய் ஒன்று ரூபாய் 15 முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முருங்கைக்காயின் விலையை கேட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
Tags:    

Similar News