சிறுமி தந்தையைக் கேட்டு அழுததால் தாய் தற்கொலை...!

கரூர் அருகே சிறுமி தன் தந்தையைக் கேட்டு அழுததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-12-28 16:21 GMT

5- வயது சிறுமி தன் தந்தையைக் கேட்டு அழுதவாறு சென்றதால் தூக்கிட்டு தற்கொலை செய்த இளம் பெண். கரூர் மாவட்டம், மண்மங்கலம், மக்கள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 55. இவரது மகள் ஷோபனா வயது 31. ஷோபனாவிற்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார் முருகேசன். ஷோபனாக்கு ஐந்து வயதில் தேஜாஸ்ரீ என்ற மகள் உள்ளார். இதனிடைய கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, ஷோபனா கடந்த மூன்று வருடங்களாக அவரது தந்தை முருகேசன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்  குழந்தை தேஜாஸ்ரீ, அவரது தந்தை மீது ஞாபகம் ஏற்பட்டதால், தந்தையை கேட்டு அழுதவாறு அவரது வீட்டுக்கு சென்று உள்ளார்.

Advertisement

இதனால், அதிர்ச்சி அடைந்த ஷோபனா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய முருகேசன் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்திற்கு நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்துள்ளார்.

சம்பவம் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஷோபனாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News