குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை
குலசேகரபட்டினம் அருகே குழந்தை இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
Update: 2024-05-23 05:39 GMT
தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெரிய கோவில் தெருவைச் சேர்ந்தவர் அசாருதீன் மனைவி நசீரா பானு (26). இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி உடல் நலம் சரி இல்லாமல் குழந்தை இறந்து விட்டதாம். இதனால் மன வேதனையில் இருந்த இருந்த நசீரா பானு நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குலசேகரபட்டினம் காவல் நிலையத்தில் டிஎஸ்பி வசந்த ராஜ் வழக்கு பதிவு செய்துள்ளா். நசீரா பானு திருமணம் ஆன 3 ஆண்டுகளில் இறந்ததால் சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.