பெண் மாயம் - போலீசார் விசாரணை
கள்ளகுறிச்சி மாவட்டம், அக்கராயபாளையத்தில் மகளை காணவில்லை என தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
Update: 2024-04-15 06:55 GMT
சின்னசேலம் அடுத்த அக்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் பாபு மனைவி பரிதா, 26; திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், கணவரை பிரிந்து கள்ளக்குறிச்சியில் தாய் தில்ஷாத் வீட்டில் வசித்து வந்தார். இவரை கடந்த 11ம் தேதி மாலை முதல் காணவில்லை. அவரது தாய் தில்ஷாத் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.