நெடுஞ்சாலை தடுப்புகளால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த தடுப்புகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.;

Update: 2024-05-20 01:02 GMT

நெடுஞ்சாலை தடுப்புகளால் அவதி

சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது கனகம்மாசத்திரம் கிராமம். இங்கு திருவாலங்காடு, திருத்தணி, திருவள்ளூர் மற்றும் கனகம்மாசத்திரம் பஜாருக்கு வாகனப் பிரிந்து செல்லும்நான்கு முனை சந்திப்பு உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் திருப்பதி, சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும்.

Advertisement

எனவே கனகம்மாசத்திரம் சந்திப்பை வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக கடந்து செல்ல காவல் துறையினரால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல அமைக்கப்பட்ட தடுப்பு, சாலை நடுவில் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தாமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும்சேதமான தடுப்புகள் சாலையில் வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். இதுகுறித்து உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News