நெடுஞ்சாலை சீரமைப்புப் பணியால் வாகன ஓட்டிகள் அவதி !

கரூரில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் நடைபெறும் சீரமைப்புப் பணியின்போது காற்றில் பறக்கும் மண் துகள்களால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறாா்கள்.

Update: 2024-03-11 09:16 GMT

வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் திண்டுக்கல் சாலை சுங்ககேட் முதல் வெங்கக்கல்பட்டி வரை சாலையை மேம்படுத்தும் பணிகள் கடந்த 20 நாள்களாக நடைபெறுகின்றன. இதில் ஏற்கெனவே இருக்கும் பழைய சாலையின் மேற்பகுதியை அகற்றி தாா் ஊற்றிடும் வகையில், ராட்சத இயந்திரம் மூலம் சாலையை அகற்றும் பணி நடக்கிறது. சாலையின் மேற்பகுதியை இயந்திரம் மூலம் அகற்றும்போதே வாகனங்கள் சாலையில் இருபுறமும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.இதனால் சாலையில் இருந்து வெளியேறும் மண் துகள்களால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறாா்கள். இதுதொடா்பாக வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலையை மேம்படுத்துவது நல்லதுதான். ஆனால் இந்தப் பணியை ஆட்கள் மற்றும் வாகனங்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரங்களில் செய்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றனர்.
Tags:    

Similar News