ரெட்டியார்சத்திரம் அருகே மணல் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி
ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகளுக்கு டிப்பர் லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுகின்றன.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 16:17 GMT
மணல் கொண்டு செல்லும் லாரிகள்
ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகளுக்கு டிப்பர் லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுகின்றன. ஆனால் மணலை தார்ப்பாயால் மூடி எடுத்து செல்லப்படுவதில்லை. இதனால் காற்றின் வேகத்தில் லாரியில் இருந்து பறந்து செல்லும் உலர்ந்த மணல் துகள்கள்,
பின்னால் டூவீலர்களின் வருவோரின் கண்களை பதம் பார்த்து விடுகின்றன. இதனால் பின்னால் செல்லும் டூவீலர் ஓட்டுனர்கள், சாலை தென்படாதநிலையில் கீழே தவறி விழுந்து காயமடைகின்றனர்.
மேலும் 4 சக்கர வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகளில் படிவதால் விபத்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.