சாலையோர பள்ளங்களை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சாலையோர பள்ளங்களை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மறைமலை நகர்- ஆப்பூர் சாலை 7 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை, சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையை, புறநகர் பகுதிகளான மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, ஆப்பூர், சேந்தமங்கலம், வளையகரணை உள்ளிட்ட கிராம மக்கள், மறைமலை நகர் உள்ளிட்ட புறநகர் பகுதி களுக்கு, இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சில ஆண்டுகளில், இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த சாலையில், ஆப்பூர் - தாலிமங்கலம் இடையே, சாலை ஓரம் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து இடையூறாக உள்ளன.அதே பகுதியில்,
தார் சாலை சரிந்து பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் எதிர் எதிர்திசையில் செல்ல தடை ஏற்படுகிறது. இதனால், மாலை நேரங்களில் பணி முடித்து செல்வோர், நெரிசலில் சிக்கி வீண் வாக்குவாதங்கள் எழுகின்றன. எனவே சாலையையும் சாலையோர பள்ளங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். அதே பகுதியில், தார் சாலை சரிந்து பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால்,
ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் எதிர் எதிர்திசையில் செல்ல தடை ஏற்படுகிறது. இதனால், மாலை நேரங்களில் பணி முடித்து செல்வோர், நெரிசலில் சிக்கி வீண் வாக்குவாதங்கள் எழுகின்றன. எனவே சாலையையும் சாலையோர பள்ளங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.