அத்தனூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை திறந்து வைத்த எம்பி
அத்தனூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை ராஜ்யசபா உறுப்பினர் ராஜேஸ்குமார் திறந்து வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-15 13:29 GMT
வேளாண் மையத்தை திறந்து வைத்த எம்பி
வெண்ணந்தூர் வட்டாரம், அத்தனூரில் ரூ.37.55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அத்தனூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை ராஜ்யசபா உறுப்பினர் KRN.ராஜேஸ்குமார் எம்.பி., திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் வட்டாரம், அத்தனூரில் ரூ.37.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அத்தனூர் துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா தலைமை வகித்தார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN. ராஜேஸ்குமார் எம்.பி., கட்டிடத்தைத் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதில், வெண்ணந்தூர் ஒன்றிய திமுக., செயலாளர் R.M.துரைசாமி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.