எம்பி திறந்து வைத்த கலையரங்க கல்வெட்டு உடைப்பு - ஆதரவாளர்கள் அதிர்ச்சி
காவல் நிலையத்தில் புகார்;
Update: 2023-12-07 06:09 GMT
உடைக்கப்பட்ட கல்வெட்டு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி 15-வது வார்டு இரவுச்சேரியில் எம்எல்ஏ தொகுதி நிதியில் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டு டிசம்பர் 2ஆம் தேதி எம்பி கார்த்திக் சிதம்பரம் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று இரவு அந்த கல்வெட்டை சிலர் கடப்பாறை வைத்து பெயர்த்து உடைத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.