விவசாயிகளின் ஆட்சியை அகற்ற வேண்டும்- உளறிக்கொட்டிய ஜோதிமணி

கரூரில் விவசாயிகளின் ஆட்சியை அகற்ற வேண்டும் என உளறிக்கொட்டிய ஜோதிமணி.

Update: 2024-03-29 11:51 GMT

எம்.பி ஜோதிமணி 

கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக எம்.பி ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார். இவர், இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை கடைவீதி பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் அவர் பேசும்போது, கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி ஒரு நாள், ஒரு மணி நேரம் அல்லது பத்து நிமிடமாவது விவசாயிகளுக்காக நேரம் ஒதுக்காமல் இருந்ததை பொதுமக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும், இந்த மாதிரி விவசாயிகளுக்கு எதிரான ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்கு பதிலாக, இந்த மாதிரி விவசாயிகளுக்கான ஆட்சியை அகற்ற வேண்டும் என்று உளறி கொட்டினார். தொடர்ந்து பேசிய அவர், இங்கு கூடியிருக்கும் நிறைய பேரில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களும் உள்ளனர். அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. வயதில் முதியவர்கள் சம்பள பணம் வரவில்லை என அழுகிறார்கள். அரசாங்கம் கொடுக்கும் இலவச அரிசி கிடைத்து விடுகிறது. அதற்கு புளி, மிளகாய், பருப்பு, எண்ணெய் போன்றவை வாங்க பணமில்லாமல் அவதிப்படுகின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இது போன்று நடக்கவில்லை. ஒரு வாரம் வேலை செய்தால், மறுவாரம் வேலை செய்யும் இடத்திலேயே பணம் வழங்குவார்கள் என தெரிவித்தார்.
Tags:    

Similar News