விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முகூர்த்தக்கால் நடும் விழா
விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.;
முகூர்த்த கால் நடும் விழா
விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் ஊர் முக்கியஸ்தர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு பிடாரியம்மன் திடலில் ஜல்லிக்கட்டு,
நடத்துவதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை ஆட்சித் தலைவர் அவர்களிடம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் உத்தரவுகளை பிறப்பித்து விராலிமலை ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு 30 நிமிடங்களில் அரசாணை பெற்றுத்தந்த,
முன்னாள் அமைச்சர் ஜல்லிக்கட்டு நாயகன் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்களுக்கு காளை வளர்ப்போர், ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்தனர்.