முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டமும், தொடர் போராட்டமும் நடத்தப்படும் என பாசன விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Update: 2024-05-27 10:07 GMT

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டமும், தொடர் போராட்டமும் நடத்தப்படும் என பாசன விவசாயிகள் அறிவித்துள்ளனர்.  

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டமும், தொடர் போராட்டமும் நடத்தப்படும் என பாசன விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் முல்லைப் பெரியாறு அணை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க கூட்டம், தலைவர் முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தவறான கருத்தை கூறி பீதியை கிளப்பும் கேரளா அரசை கண்டித்து வரும் 30-ஆம் தேதி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும்,அணை உடைந்தால் கேரள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறி முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரளா அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு தேவையற்ற பீதியை கிளப்புவதாகவும் கேரளா மற்றும் தமிழ்நாடு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கேரள அரசின் நடவடிக்கை இருப்பதாக குற்றம் சாட்டிய முல்லைப் பெரியாறு அணையின் ஒரு போக பாசன விவசாயிகள் சங்கத்தினர், தொடர்ந்து இதுபோன்று கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்ட முயற்சி செய்தால் அதனை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனுடைய கேரள அரசு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து வரும் புதன்கிழமை மேலூரில் அனைத்து விவசாயிகள் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலூர் தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் முருகன் கேரளா அரசின் நடவடிக்கையை ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

Similar News