முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-03-18 02:29 GMT
திருத்துறைப்பூண்டி பிரசித்து பெற்ற முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தீக்குழியில் இறங்கிய போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர்.