நகராட்சி நிர்வாக துறை பணியாளர் தேர்வு

திருப்பூரில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

Update: 2024-06-30 03:16 GMT

பைல் படம் 

தமிழ்நாடு முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்  வழங்கல் துறையின் கீழ் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 1933 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மேலும், நகராட்சி திட்ட பொறியாளர் பணிக்கு ஜூலை 7ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ள 2 லட்சத்து 880 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 149 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. திருப்பூர் பல்லடம் சாலை எல் ஆர் ஜி கலைக்கல்லூரியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேற்று தேர்வு நடைபெற்றது. தேர்வு காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இதில் இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கி, 12 30 மணிக்கு ஒரு தேர்வும், இரண்டு மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு மற்றொரு தேர்வு நடைபெற்ற வருகிறது. மேலும் இன்றும் இத்தேர்வு நடைபெற்று வருகிறது. முதல் நாள் தேர்வில் 640 பேர் தேர்வு, எழுத தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், 355 நபர்கள் மட்டுமே தேர்வு எழுத நேற்று வந்திருந்தனர். இத்தேர்வில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகத்தில் பணிகள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News