வாக்குச்சாவடி மையங்களில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-16 07:19 GMT
2024-மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி திருப்பூர் 114-தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  வாக்கு சாவடி மையங்களில் ஒரு வாக்கு சாவடி மையத்திற்கு   1500-க்கும், மேற்பட்ட வாக்காளர்கள் 1 வாக்கு சாவடியில் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் வாக்கு சாவடி மையம் அமைக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான திரு. பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.03.2024) வாக்காளர்கள் அதிகமாக உள்ள வாக்கு சாவடிகளான (பூத்) 104- கே.வி. ஆர். நகர், எஸ். எஸ்.ஏ. நர்சரி பள்ளி, 132-நொய்யல் தொடக்கப்பள்ளி, 175-நொய்யல் உயர்நிலைப்பள்ளி, 176-காங்கேயம் பாளையம் புதூர் நடுநிலைப்பள்ளி, 226-நல்லூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, 235-சென்னிமலை பாளையம் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் கூடுதல் வாக்கு சாவடி மையம் (பூத்) அமைக்க பள்ளியில் இட ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது.  தேர்தல் துணை வட்டாட்சியர்  திரு.வசந்தா உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News