மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை பகுதியில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்க கோரிக்கை வைத்ததை அடுத்து மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷ்னர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-03-01 01:05 GMT

மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷ்னர் ஆய்வு

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம், கோட்டம் எண்.43 பகுதிக்குட்பட்ட எருமாப்பாளையம் சாலையில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருவதாகவும், இப்பகுதி குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கவும் அப்பகுதி மக்கள் கவுன்சிலர் குணசேகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கவுன்சிலர் கோரிக்கையை மாநகராட்சி மேயர் ராமசந்திரன், கமிஷனர் பாலசந்தர் ஆகியோரிடம் தெரிவித்ததையடுத்து அப்பகுதிக்கு மேயர் ராமசந்திரன், கமிஷனர் பாலசந்தர் ஆகியோர் நேரடியாக சென்று பிரதான குடிநீர் குழாய் மாற்றி அமைக்க கள ஆய்வு செய்தனர்.

ஆய்வில் குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்க தேவைப்படும் குடிநீர் குழாய்கள் கணக்கீடு செய்து அதற்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்ய அம்மாப்பேட்டை மண்டல உதவி செயற்பொறியாளருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு, சுப்ரமணிய தெரு எண்,1 மற்றும் 2, அண்ணா நகர் பகுதியில் உள்ள தனசிவா மண்டபம் சாலை, மற்றும் குறுக்கு தெருக்களுக்கும், ஓந்தாப்பிள்ளைக்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர் புற நல வாழ்வு மையம் முதல் அசோக் நகர் வரை மழைநீர் வடிகால் வசதி அமைத்துக் கொடுப்பது தொடர்பாக மேயர் மற்றும் கமிஷனர் அப்பகுதிகளுக்கு சென்று நேரடி கள ஆய்வுசெய்தனர்.

Tags:    

Similar News