திண்டுக்கல் அருகே கோர்ட் மாடியில் இருந்து குதித்த கொலை குற்றவாளி

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் கோர்ட் மாடியில் இருந்து குதித்ததால் கால் முறிவு ஏற்பட்டது.;

Update: 2024-04-15 12:06 GMT

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் கோர்ட் மாடியில் இருந்து குதித்ததால் கால் முறிவு ஏற்பட்டது.


திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் கோர்ட் மாடியில் இருந்து குதித்ததால் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 2 மாடியில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்காக வந்த பழனி தாலுகா காவல் நிலைய பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருமூர்த்தி என்பவர் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஏற்கனவே இது மாதிரி ஒரு குற்றவாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பு மற்றொரு சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News