கொலை வழக்கு - சுமை தூக்கும் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த கொலை வழக்கில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2024-04-24 08:14 GMT

பைல் படம் 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சுமை தூக்கும் கூலி தொழிலாளி பூங்காவனம் என்பவரை சக தொழிலாளி குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மார்பிள கல்லால் தாக்கி கொலை செய்ததது தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல்துறை வழக்கு பதிவு செய்தது. குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி, நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி குமார்க்கு ஆயுள் தண்டனை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.முருகானந்தம் தீர்ப்பு வழங்கினார். பூங்கவனத்தின் மனைவிற்கு 5.5 லட்சம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News