ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கறிக்கடைக்காரர் கொலை: காவல்துறை விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கறிக்கடைக்காரர் கொலை செய்யப்பட்ட நிலையில், உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2024-06-16 10:13 GMT

கொலை செய்யப்பட்டவர்

 விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே உள்ள கிருஷ்ணமநாயக்கர்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் பிரசாந்த் 28 இவருக்கு திருமணம் ஆகி நான்கு வயதில் மகன் ஒருவரும் இருக்கிறார் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த ஒன்றரை வருடமாக பிரசாந்த் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இவர் எரிச்சநத்தம் பகுதியில் பன்றி இறைச்சிக்கடை நடத்தி வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் பகுதியில் குன்னூர் விளக்கு அருகே புதியதாக ஆடு இறைச்சி கடை வைத்தாக கூறப்படுகிறது அதே போல் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆட்டு இறைச்சி கடை போடுவதற்காக நேற்று இரவே எரிச்சநத்தத்தில்,

இருந்து புறப்பட்டு கிருஷ்ணன் கோவில் வசித்து வரும் தனது மாமா வீட்டுக்கு வந்துள்ளார்.இந்த நிலையில் இன்று அதிகாலை கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள தனியார் பார் அருகே ரத்த வெள்ளத்தில் வெட்டு காயங்களுடன் பிரசாந்த் பிணமாக கிடந்துள்ளா்.

இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்ற கிருஷ்ணன்கோவில் போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த பிரசாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரசாந்தை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தனர்,

எத்தனை பேர் கொலை செய்தனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கிருஷ்ணன் கோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இன்று அதிகாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் கிருஷ்ணன் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News