காளான் உதவி ஆணையர் அலுவலக வாகனம் ஏலம்
கரூரில் காளான் உதவி ஆணையர் அலுவலக வாகனம் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By : King 24x7 Website
Update: 2023-10-27 15:28 GMT
கரூரில் கலால் உதவி ஆணையர் அலுவலக வாகனம் ஏலம் விடப்படும் எனகலால் உதவி ஆணையர் கருணாகரன் அறிவிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கரூர் கலால் உதவி ஆணையர் அலுவலக வாகனம் (Commander Jeep )(Mahindra & Mahindra) பொது ஏலம் விடப்பட உள்ளது. கரூர் மாவட்டம் கலால் உதவி ஆணையர் அலுவலகப் பயன்பாட்டிற்கான வாகனம் முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டு, பொது ஏலமானது 14.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 14.11.2023 அன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை கமாண்டர் ஜீப்பிற்கு (மகேந்திரா & மகேந்திரா) ரூ.2,000/- முன் வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகை மற்றும் 18% GST (9% SGST+ 9% CGST ) வரியுடன் சேர்த்து அன்றைய தினமே உடனே செலுத்திட வேண்டும். ஏலம் எடுக்க விரும்புவர்கள் 06.11.2023 அன்று காலை 10.00 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பார்வையிடலாம் என கலால் உதவி ஆணையர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.