குடிமனைப்பட்டா கோரி இஸ்லாமிய பெண்கள் முற்றுகை

திண்டுக்கல்லில் குடிமனைப்பட்டா கோரி இஸ்லாமிய பெண்கள் மேற்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-20 11:45 GMT
திண்டுக்கல்லில் குடிமனைப்பட்டா கோரி இஸ்லாமிய பெண்கள் மேற்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலபாரதி, பீமாராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏவுமான பாலபாரதி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலச்செயலாளரும் முன்னாள் சென்னை எம்எல்ஏவுமான பீமாராவ், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குடிமனைப்பட்டா கோரும் 350 பேர்களின் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
Tags:    

Similar News