முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

காஞ்சிபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் கூழாத்து விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

Update: 2024-05-14 15:11 GMT

காஞ்சிபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் கூழாத்து விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.


காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் மேல்கரையில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், அனுக்கிரகத்துடன் 19ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா, கடந்த 10ம் தேதி, காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரத்துடன் துவங்கியது. குமரகோட்டம் தலைமை அர்ச்சகர் காமேஸ்வர குருக்கள் தலைமையில் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம், மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து களியனுார் செல்லியம்மன் கலைகுழுவினரின் பம்பை, கைச்சிலம்பாட்ட நிகழ்ச்சியும், அம்மன் வர்ணிப்பும் நடந்தது. நேற்று, காலை 8:00 மணிக்கு சர்வதீர்த்த குளக்கரையில் இருந்து கரகம் மற்றும் பால்குடம் வீதியுலா நடந்தது. இதில், பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், உடலில் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்வும், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது. இன்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
Tags:    

Similar News