ஓமலூரில் என் மண் என் மக்கள் யாத்திரை
ஓமலூரில் நடந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Update: 2024-01-05 02:34 GMT
சேலம் மாவட்டம், ஓமலூரில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் உள்ள தனியார் கிருஷ்ண மஹால் திருமண மண்டபம் அருகே பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் என்மண் என்மக்கள் என்ற பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட பாதயாத்திரை ஓமலூர் பஸ் நிலையத்தில் முடிவுற்றது. இதில் வழிநெடுகிலும் பொதுமக்கள் அண்ணாமலைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கைகொடுத்தும், மலர்மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் ஓமலூர் பஸ் நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமாகா மேற்கு மாவட்டம் சார்பில் அக்கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் அண்ணாமலைக்கு மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கேபி ராமலிங்கம், மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.