என் வாக்கு என் உரிமை என்வாக்கு விற்பனைக்கு இல்லை என விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சி!
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் என் வாக்கு என் உரிமை என்வாக்கு விற்பனைக்கு இல்லை என விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-29 08:56 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் திருப்பூர் மாவட்டம் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய 114- திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் என் வாக்கு என் உரிமை! என் வாக்கு விற்பனைக்கு இல்லை என விழிப்புணர்வு இயக்கம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் உடன் உதவி ஆட்சியர் பயிற்சி கிருத்திகா விஜயன்,உதவி ஆணையாளர் வினோத்,உதவியாளர் கனகராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.