மர்மமான முறையில் வயதான தம்பதியினர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
மதுரவாயலில் வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-30 04:07 GMT
உயிரிழந்த முத்துகாமாட்சி, பவுனம்மாள்
சென்னை, மதுரவாயல் ஆலப்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் முத்துகாமாட்சி (95) மற்றும் பவுனம்மாள் (87). இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனுடன் வசித்த வந்த தம்பதியினர் நேற்று காலை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களது உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இது தற்கொலையா? இயற்கை மரணமா? கொலையான என விசாரித்து வருகின்றனர்.