வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

சிவகாசி அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.;

Update: 2024-03-29 10:57 GMT
சிவகாசி அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்த மர்ம கும்பலுக்கு வலைவீசும் போலீஸ்...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் ரோடு 56வீட்டு காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி பாண்டீஸ்வரி (47).இவர் தனக்கு சொந்தமான கார் மற்றும் மகனின் டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று இரவு 12 மணிக்கு வீட்டில் வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்,டூவீலர் எரிந்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement

உடனடியாக பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களின் உதவியுடன் தீயை அணைத்தார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அதில் 3 பேர் கொண்ட கும்பல் வாகனங்களை எரித்தது தெரியவந்தது.அவர்கள் யார்? எதற்காக வாகனங்களை எரித்தனர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News