தூத்துக்குடியில் பைக் திருடும் மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சிகளோடு புகார்

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி செல்லும் இருசக்கர வாகன திருட்டு கும்பல் பிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை.

Update: 2024-04-28 14:51 GMT

சிசிடிவி காட்சிகள்

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களான R15 புல்லட், கே டி எம், போன்ற இருசக்கர வாகனங்களை ஒரு கும்பல் திருடி செல்வது வாடிக்கையாக உள்ளது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் பட்ட பகலிலேயே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் வந்து இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

தூத்துக்குடி மினி சகாயபுரத்தைச் சேர்ந்த ஜெப்ரின் என்ற இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா அருகே தனது விலை உயர்ந்த ஆர்15 இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே விளையாட சென்றுள்ளார். பின்னர் அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது வண்டி காணாமல் போய் இருப்பது தெரியவந்தது இதை தொடர்ந்து அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு பார்த்து போது மூன்று பேர் கொண்ட கும்பல்,

இரு சக்கர வாகனத்தில் வந்து ஜெபிரினின் இருசக்கர வாகனத்தை லாக்கை உடைத்து சர்வ சாதாரணமாக எந்தவித பயமும் இல்லாமல் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மாலை வேளையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இல்லம் மற்றும் மாவட்ட ஆட்சியர் இல்லம் ஆகியவை அருகே இருக்கும் இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தை இந்த கும்பல் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஜெஃப்ரின் வடபாகம் காவல் துறையில் தனது இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளார் ஆனால் காவல்துறை இதுவரை அவரது வாகனத்தை கண்டுபிடித்து தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் குற்றம்சாட்டினார். மேலும் ஜெப்ரின் வசிக்கும் மினி சகாயபுரம் பகுதியிலும் கடந்த சில நாட்களாக இதேபோன்று விலையுயர்ந்த 4 இருசக்கர வாகனங்கள் காணாமல் போய் உள்ளது என அவர் தெரிவித்தார்,

ஆனால் இதையும் காவல்துறையினர் கண்டுபிடித்து தர எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் இந்த இருசக்கர வாகன திருட்டு காரணமாக பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்துவதற்கு அச்சமடைந்துள்ளனர் இந்த இருசக்கர வாகன திருட்டு கும்பலை காவல்துறையினர் உடனடியாக பிடித்து தங்களது வாகனத்தை மீட்டு தர வேண்டுமென பாதிக்கப்பட்ட நபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News