புராணகால வரலாற்று வீரட்டேஸ்பரர் ஆலயம் பாலாலயம்

மயிலாடுதுறை பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலய பாலாலயம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது.

Update: 2023-11-02 02:22 GMT

முகூர்த்த கால்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை  அருகே திருப்பறியலூர் எனப்படும்,  பரசலூர் கிராமத்தில்,  அட்டவீரட்ட தலங்களில், 4-வது தலமான, இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தட்சன் நடத்திய யாகத்திற்கு மருமகனான சிவனை அழைக்காத காரணத்தால், கோபம்கொண்டு தட்சனின் தலையைக் கொய்த சம்பவமும், தட்சனின் மனைவி கேட்டுக் கொண்டதன்பேரில் தட்சனை உயிர்ப்பித்த தலமும் இது என்பதால், பிரசித்திபெற்ற தலமாகும். இந்தக் கதையை, தக்கயாகப் பரணி என்ற நூலில், ஒட்டகூத்தர் எழுதியுள்ளார். புராண வரலாறு கொண்ட இந்த ஆலயத்திற்கு, கடந்த 2011ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  தருமை ஆதீனத்தின் கட்டுப் பாட்டில் இந்த ஆலயம் உள்ளது, 27வது சன்னிதானம்,  திருப்பணிக்கான சிறப்புப் பூஜைகளை செய்து முகூர்த்த கால் நட்டு, மகா தீபாராதனை காட்டினார்.
Tags:    

Similar News