நான் முதல்வன் கல்விக் கனவு திட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

பள்ளி கல்வித்துறை சார்பில் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் கல்விக் கனவு திட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

Update: 2024-05-10 12:23 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் முதல்வன் கல்வி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் அணிகேத் அசோக், கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி தாளாளர் மீனாட்சி அண்ணாமலை, கருத்தாளர்கள் சங்கர் சரவணன் , ஆனந்த் குமார், நெடுஞ்செழியன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்தெந்த துறை சார்ந்த கல்லூரிகளில் படிப்பது குறித்தும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எவ்வாறு படிப்பது குறித்தும், உயர்கல்வி படிக்க எத்தனை துறை சார்ந்த படிப்புகள் உள்ளது குறித்தும், மாணவ மாணவிகள் தங்களின் கணவனை நினைவாக்கும் வகையில் அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் பற்றி பிரிவு வாரியான பட்டப்படிப்புகள் பட்டய படிப்புகள் எத்தனை உள்ளது என்பதை மாணவர்களிடம் எடுத்துக் கூறி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள 35 அரசு பள்ளிகளில் இருந்து 1500 மாணவர்கள் கலந்துகொண்டு நான் முதல்வன் கல்வி கனவு திட்டத்தில் பயன்பெற்றனர். முன்னதாக பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5000 காசோலை மற்றும் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுபரிசுகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News