ஆரஞ்ச் அலர்ட் எதிரொலி : நாகை மாவட்டத்தில் தொடங்கியது மழை..!
நாகை மாவட்டத்தில் 15 நாட்களுக்குப் பிறகு இன்று காலை முதல் மழை பெய்துவருகிறது.
By : King Editorial 24x7
Update: 2023-12-16 04:50 GMT
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்துவரும் நிலையில், இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதைத் தொடர்ந்து, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை முதல் நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது .கடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று காலை முதல் மழை பெய்துவருவது ஒரு வகையில் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.